திருச்சபையே எழும்பிடு

 

 

திருச்சபையே எழும்பிடு

உன் வல்லமையை தரித்துக்கொள்

இயேசுவின் உத்தமியே

உன் மேன்மையை அறிந்துக்கொள்

 

உலகம் தோன்றும் முன்னே

முன் குறித்தார் உன்னையே

ஜீவனை கிரயமாய்

ஈந்துனை கொண்டாரே      - திருச்சபையே

 

என் சபையை கட்டுவேன்

அது கிறிஸ்துவின் வாக்கல்லோ

பாதாள வாசல்கள்

உன்னை மேற்கொள்ள முடியாதே        - திருச்சபையே

 

ஆவியானவர் என்றுமே

உன்னுடன் இருக்கின்றார்

அவர் அபிஷேகம் உன்னையே

தினம் தழைக்க செய்யுமே             - திருச்சபையே

 

உன் நடுவில் மணவாளன்

என்றென்றும் உலாவுவார்

உன் அழகில் பிரியமாய்

தினம் மகிழ்ந்து பூரிப்பார்                 - திருச்சபையே

 

எக்காள தொனியுடன்

உன்னை சேர்த்திட வருவாரே

ஆட்டுக்குட்டியின் மணநாளில்

மணவாட்டி நீ மகிழ்வாயே            - திருச்சபையே